Friday, October 14, 2016

விக்ரமனின் படம்

வாழ்கை சில வேளைகளில் விக்ரமனின் படம் போல இருக்கின்றது.

காட்சி -01
கோமளவல்லி எனும் இயற்பெயர் கொண்ட, அம்மு என அழைக்கபட்ட 12 வயது சிறுமி நாட்டிய அரங்கேற்றம் செய்கிறார், அந்நிகழ்வுக்கு அன்றைய மகா உச்ச நடிகர் சிவாஜி கணேசன் அந்த நாட்டிய அரங்கேற்றத்துக்கு தலைமைதாங்குகிறார். காலில் விழுந்து ஆசி வாங்கினார் அம்மு.

காட்சி -02
35 வருடம் கழித்து அந்த கோமளவல்லி, ஜெயலலிதா எனும் பெயரோடு தமிழக முதல்வராய் குதிரை வண்டியில் வீற்றிருக்க, முதல்வரின் வளர்ப்பு மகன் திருண ஊர்வலத்தில், ஓரமாக சோகமாய் நடந்து வந்தார் சிவாஜி கணேசன் என்ற அன்றைய உச்ச நட்சத்திரம்.
 
என்னத்த சொல்ல? No words.

Thursday, October 6, 2016

பௌதிகவியலுக்கான நோபல் விருது 2016

2016ம் ஆண்டுற்கான பௌதிகவியலுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை இங்கிலாந்தை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட, மூன்று நபர்கள் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
விருதுக்கான நோக்கம்:- குறைகடத்திகள் வெப்பம் குறைவாக இருக்கும் போது மின்னைக்கடத்தும். அதுவே வெப்பம் அதிகரிக்கும் போது அவை தடைகளாக அல்லது மின்னை கடத்தும் திறனை இழக்கின்றது.
இந்த பண்பு  ஏன் ஏற்படுகின்றது என்பதை விளக்கும் தேற்றத்திற்காகவே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேற்றம் Topological phase Transition Theorem என இயற்பியலாளர்களால் அழைக்கப்படுகின்றது.


இதெல்லாத்தையும் நோட் பண்ணுங்கப்பா!!!! நோட் பண்ணுங்கப்பா!!!!

இதெல்லாத்தையும் நோட் பண்ணுங்கப்பா!!!! நோட் பண்ணுங்கப்பா!!!!